புதன், 18 டிசம்பர், 2013

தமிழுக்கும் அமுதென்று பேர்

மனதிற்குப்பிடித்த இறைவனையும், மழலை மொழி பேசும் மகவையும், பல்வேறு பெயர் சூட்டி அழைத்துப் பாராட்டி மகிழ்வது, நம் இயல்பு. அவ்வாறே தமிழையும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
தண்டமிழ், ஒண்டமிழ், வண்டமிழ், மென்றமிழ், இன்றமிழ், இருந்தமிழ், நற்றமிழ், பைந்தமிழ், பசுந்தமிழ், ஒல்காப் பெருந்தமிழ், செந்தமிழ், முத்தமிழ், தெள்ளுதமிழ், தென்தமிழ், கூடல்தமிழ், சங்கத்தமிழ்,
இத்தனைப் பெயர்கள் வேறு எந்த மொழிக்கும் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.
புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், மதுரைக்காஞ்சி,கம்பரின் இராமாயணம், சரஸ்வதி அந்தாதி போன்ற நூல்களில் இப் பெயர்களில் சிலவற்றைக் காணலாம். ஔவையாரில் தொடங்கி பாரதியார் பாரதிதாசன் வரையுள்ள புலவர்களும் இப் பெயர்களில் பலவற்றைக் கையாணடிருப்பதைக் காணலாம்..

இத்தகைய பெருமைமிக்க தமிழைத் தாய்மொழியாகப் பெற்ற நாமும்  தமிழைப் பிழையறக் கற்றோரும் பெரும்பேறு பெற்றவர்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக