புதன், 18 டிசம்பர், 2013

ஓர் எழுத்துச் சொற்கள்

தமிழில் உள்ள உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துக்களால் ஆன ஓர் எழுத்துச் சொற்கள் தமிழின் தொன்மையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தொடக்கத்தில் சைகையாலும் குறுகிய ஓசையாலும்தான் மனிதர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த வகையில் ஆதிமனிதனின் மொழியின் வழி வந்ததே தமிழ் என்பதும் தமிழின் தொன்மையும்  தெளிவாகிறது.

1. அ --இது ஒரு சுட்டுச் சொல். சிறிது தொலைவில்
                உள்ளவற்றைச் சுட்டப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டு
                அது, அப்பக்கம்
 மேலும் தமிழ் எண் சுவடியில் 8 என்ற எண்ணைக் குறிக்கவும்  
பயன்படுகிறது.
2. பசு, வலியின் மிகுதியைக் குறிக்கப் பயன்படுகிறது
3. இ --அருகில் உள்ளவற்றைச் சுட்டப் பயன்படுகிறது.
           எடுத்துக்காட்டு இது, இப்பக்கம்
4.  ஈ -- வழங்கு, கொடு, ஒரு சிறு பூச்சி
5. உ --இடைப்பட்ட தூரத்தில் உள்ளவற்றைச் சுட்டப் பயன்படுகிறது.
              எடுத்துக்காட்டு உப்பக்கம்
               "ஊழையும் உப்பக்கம் காண்பர்" எனத் திருக்குறளில்
                          பயன்படுத்தி உள்ளதைக் காணலாம்.
              மேலும் தமிழ் எண் சுவடியில் 2 என்ற எண்ணைக் 
           குறிக்கவும் பயன்படுகிறது
6. நாய் ஓநாய் போன்றவை துன்பத்தில் எழுப்பும் ஒலியைக்
              குறிக்கப்பயன்படுவது
7. எ -- தமிழ் எண் சுவடியில் 7 என்ற எண்ணைக் குறிக்கப்
                         பயன்படுகிறது
8. விளிக்குறி ( ஏ இளைஞனே )
9. ஐ --அழகு, ஐந்து எனும் சொல் புணர்ச்சியில் மாறி
              வருவது(ஐம்பொன்)
10. வியப்பு மற்றும் திகைப்பைக் குறிக்கப் பயன்படுகிறது
11. க -- தமிழ் எண் சுவடியில் 1 என்ற எண்ணைக்குறிக்கப்
                            பயன்படுகிறது.
              கைக்கிளை என்னும் சுரத்தின் குறிக்கப் பயன்படுகிறது.
12. ங -- குருணி என்னும் அளவைக் குறிப்பது
13. கா சோலை
                    காத்தல் என்பதின் வினை, காப்பாற்று
14. சா -- சாதல் என்பதின் வினை, செத்துப்போ
15. தா -- தருதல் என்பதின் வினை, கொடு
16. நா நாக்கு, சொல்(நா நயம்), மணியின் உறுப்பு
17. மா குதிரை பெரிய
18. வா -- வருதல் என்பதின் வினை, இங்கே வா
19. பா பாட்டு
20. யா ஒருவகை மரம், அகலம்
21. நீ -- முன்னிலை
22. தீ நெருப்பு
23. சீ --இகழ்சிக் குறிப்பொலி
24. கீ --கிளி எழுப்பும் ஒலி
25. சூ --நாயை ஏவும் ஒலிக்குறிப்பு
26. பூ மலர்
27. மு,மூ மூன்று எனும் சொல் புணர்ச்சியில் மாறி வருவது
                        (முத்தமிழ் மூவேந்தர்)
28. தூ இகழும் சொல்
29. தே இனிமையான (தேநீர், தேமதுரத்தமிழ் ஓசை)
30. சே அளிஞ்சில் மரம், வெறுப்பைக்காட்டும் ஒலி
31. கை --உடல் உறுப்பு
32. பை பொருட்களை வைத்து எடுத்துச்செல்லப் பயன்படுவது
33. மை கண்ணிற்கு இடும் களிம்பு, எழுதப்பயன்படும் நீர்மம்
34. வை -- திட்டு, வைத்தல் என்பதின் வினைப்பகுதி
35. தை ஒரு தமிழ் மாதம், துணியைத்தைப்பது
36. சை மனச்சலிப்பைக் குறிக்கும் ஒலி
37. கோ அரசன்
38. சோ துன்பம் (சோ காப்பர்), மழை பெய்யும் ஒலி
39. தோ நாயை அழைக்கும் ஒலி
40. போ – செல்
41. -- தமிழ் எண் சுவடியில் 1/4 ஐக்குறிக்கப் பயன்படுகிறது
42. மே -- மேம்பாடு, அன்பு (www.tamilvu.org/library/libindex.htm)
43 பே -- வாய் பேச இயலாதோர் செய்யும் ஓர் ஒலிக்குறி
44. சு -- அதட்டும் ஒலி
45. ரே -- தாலாட்டுப்பாடலின் தொடக்கத்தில் வரும் ஒலி

 இன்னும் எவையேனும் விடுபட்டிருப்பின் அடுத்த பதிவில் ஏற்றலாம்.  நன்றி 

1 கருத்து:

  1. Online Casino | Online slots | No deposit casino site
    Online choegocasino Slots at BoCasino. Exclusive 200% Bonus Up To €1000 + 인카지노 200 Free Spins for new players. Enjoy Live casino games with deccasino real money!

    பதிலளிநீக்கு