திங்கள், 30 டிசம்பர், 2013

செம்மொழி என்பது யாது?



        தொன்மையான இலக்கியம் உடைய மொழியே செம்மொழி எனப்படும்.(A classical language is a language with a literature that is classical.) மற்றொரு மொழியிலிருந்து அல்லது பண்பாட்டிலிருந்து தோன்றியதாக இருக்கக்கூடாது. நீண்ட காலம் மக்களால் பேசப்பட்டிருக்க வேண்டும். இம்மொழியின் சொற்களை வேராகக்கொண்டு புதிய சொற்களை உருவாக்கும் மொழிகள் இருக்கலாம். (According to UC Berkeley linguist George L. Hart, it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. A classical language is a language that has a broad influence over an extended period of time, even after it is no longer a colloquial mother tongue in its original form. If one language uses roots from another language to coin words then the second language is a classical language.)

                    இந்த அடிப்படையில் கிரீக், இலத்தீன், அரபிக், சமசுகிருதம், பழஞ்சீன மொழி ஆகியவையே செம்மொழிகளாகக் கருதப்பட்டன. கீப்ரு, பிரென்ச் ஆகியன இதற்கு அடுத்த நிலையில் வைக்கப்பட்டன. தமிழ் மொழி இக்காட்சியிலேயே இல்லை. 2000 ஆண்டுகளுக்குமேலான வரலாற்றைக்கொண்ட, வாழும் மொழியாகத் திகழ்வது, தமிழ் மொழியொன்றே என்று சொன்னால் அது மிகையாகாது. கிமு முதல் நூற்றாண்டு மற்றும் கிபி இரண்டாம்  நூற்றாண்டுத் தமிழ்க் கல்வெட்டுகள் இலங்கை, தாய்லாந்து மற்றும் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. (The earliest epigraphic records found on rock edicts and hero stones date from around the 5th century BC. Tamil language inscriptions written c. 1st century BC and 2nd century AD have been discovered in Egypt, Sri Lanka and Thailand.  The oldest dated Tamil Brahmi inscription in the world has been found in Palani in Southern India scientifically dated to 540 BCE - the oldest known Brahmi inscriptions on the Indian sub-continent. )
இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அரசு மொழியாகவும் இலங்கை சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும், கேரளா, ஆந்திரா, கர்னாடகா, கனடா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, மொரிசியஸ், பிரான்ஸ் மற்றும் பல நாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறுபான்மையினரால் பேசப்படுகின்ற மொழியாகவும் உள்ள தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற முதல் தீர்மானம் 1918 ஆம் ஆண்டு நடந்த சைவசித்தாந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 1897 முதலே தமிழின் உயர்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் பரிதிமாற் கலைஞர். பல தமிழ் ஆர்வலர்களின் நீண்ட கால முயற்சிக்குப்பின் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. தமிழக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் கலிபோர்னியாவில் உள்ள பெர்க்ளின் பல்கலைக்கழகப்பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹர்ட் ஆவார். அவருடைய கடிதத்தைப் படித்தால் தமிழின் பெருமையை எண்ணி நாம் இன்னும் பெருமை கொள்ளலாம்.
     மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தமிழ் ஏன் செம்மொழி என்பதற்கு 16 பண்புகளைக் கூறியுள்ளார். அவையாவன:
தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தூய்மை, தாய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை, எண்மை
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக